Monday, January 30, 2012

தைத்திருநாளில் வல்வையில் நடக்கும் மார்கழி பிள்ளையார் எடுத்தலும்,பட்ட போட்டியும்

 தைத்திருநாள் அன்று வல்வையில் மாலைநேரம் பட்டபோட்டியும், பின் இரவு நெடியகாடு இளைஞர்களால் மார்கழி பிள்ளையார் சேகரிக்கும் நிகழ்வும் வருடாவருடம் நடைபெறும். இடையில் நாட்டில் நிலவிய போர்க்கால நிலமைகளால் தடைப்பட்டிருந்தது. போன வருடம் முதல் பட்டபோட்டியும்,அதுக்கு சில வருடங்கள் முன்பிருந்து மார்கழி பிள்ளையார் எடுக்கும் நிகழ்வும் நாட்டு நிலமைகள் ஓரளவு சீரானதால் தற்போது நடைபெற்று வருகின்றன.
















1.மார்கழி பிள்ளையார் எடுத்தல்
தைத்திருநாள் அன்று இரவு வேளையில் நெடியகாடு இளைஞர்களால் இந்த மார்கழி பிள்ளையார் எடுக்கும் நிகழ்வு நடாத்தபடுகிறது.இது இற்றைக்கு ஏறத்தாள 70 வருடங்களாக நடைபெற்று வருகிறது.இது நெடியகாடு பிள்ளையார் கோவிலில் ஆரம்பித்து வல்வெட்டித்துறை சந்தி வழியாக நேரே ஆதிவைரவர் கோவில் வரை சென்று பின் அங்கிருந்து வல்வெட்டித்துறை சந்தி வந்து திரும்பி தெணியம்பை வழியாக மருதடி வரை சென்று பின் அங்கிருந்து மீண்டும் சந்தி வந்து நெடியகாடு வழியாக ஊறணி வரை ஊர்வலமாக சென்று ஊறணி தீர்த்தகடலில் பிள்ளையார் கரைத்தலுடன் நிறைவு பெறும்.
                               




































                            ஆரம்ப காலங்களில் சிறிய தேர் ஒன்றை இழுத்து சென்றே பிள்ளையார் சேர்த்து கடலில் சேர்ப்பது வழக்கமாக இருந்துள்ளது. அதன் நினைவாக இப்போதும் இரண்டாவது படத்தில் மேலே உள்ளது போன்று லைட் என்ஜின் சகடையின் முன்புறம் தேர் போன்று அலங்கரிக்கபட்டு இருக்கும்.நடக்கும் இந்த ஊர்வலத்தில் ஒவ்வொரு வருடமும் நெடியகாடு இளைஞர்கள் வித்தியாசம் வித்தியாசமான பிரமாண்ட டிராகன்கள் மாதக்கணக்காக மினக்கெட்டு செய்வார்கள். அத்துடன் மாறுவேடமணிந்த இளைஞர்களும் பறை வாத்தியம் முழங்க ஊர்வலத்தில் செல்வார்கள்.அண்மைய காலங்களில் செய்யபட்ட உருவங்கள் எனது கமேராவில் சிக்கியதை நீங்கள் காணலாம்.



2.பட்ட போட்டி
பட்ட போட்டியும் ஏறத்தாள 50 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. ஆரம்ப காலங்களில் வல்வை சனசமூக நிலையத்தால் ரேவடி கடற்கரையிலேயே நடைபெற்று வந்துள்ளது. பின் இப்போது விக்கினேஸ்வரா சனசமூக நிலையம்/உதயசூரியன் விளையாட்டு கழகத்தால் உதயசூரியன் உல்லாச(?) கடற்கரையில் நடைபெற்று வருகிறது. 94 பருவகால பகுதிக்கு பிறகுதான் இங்கு மாறியிருக்கவேண்டும் என நினைக்கிறேன் ஏன் எனில் 94இல் பருவகால பகுதியில் நடந்த பட்ட போட்டியின்போதே நான் பட்டம் பார்த்து கொண்டு அப்பிடியே போய் கடலில் விழுந்ததாக சொல்லுவார்கள். இங்கு பல இடங்களில் இருந்தும் வந்து பட்டபோட்டியில் கலந்து கொள்வார்கள், பட்டத்தின் அமைப்பு,நூலின் நீளம் என நடுவர்களால் தெரிவுசெய்யபட்டு பெறுமதிமிக்க பரிசில்கள் ஒவ்வொரு முறையும் வழங்கப்படும்.ஒவ்வொரு முறையும் வித்தியாசம் வித்தியாசமான பட்டங்கள் கலந்து கொள்ளும், என்ன இருந்தும் ஆரம்ப காலங்களில் இருப்பது போன்று இருப்பதில்லை, இம்முறை பொங்கல் பானை,பாறாத்தல்,கொக்கு,சுழலும் இரட்டை பெட்டி, 60 அடி(?) பாம்பு பட்டம்,கிபீர்,டிராகன் உள்ளிட்ட பட்டங்கள் கலந்து கொண்டிருந்த போதிலும் காலத்தின் கோலமோ என்னமோ தெரியவில்லை, சிறுவன் ஒருவனால் பியர் டின் பட்டமும் கொண்டுவரபட்டிருந்தது.



















Thursday, January 12, 2012

நண்பன்-ஆல் இஸ் வெல்

இன்று முதல் நாள் முதல் ஷோ முதல்முதலாக விஜய் படம் பார்க்க சென்று இருந்தேன், மேலும் 3 இடியட்ஸ் ஹிந்தியில் கைப்பற்றிய மாபெரும் வெற்றி மேலும் ஷங்கர் படம்,ஏலவே வெளிவந்து ஹிட் ஆன பாடல்கள் என்று மாபெரும் எதிர்பார்ப்புகளுடன்தான் சென்று இருந்தேன். ஆனால் எந்தவித ஏமாற்றத்தையும் அளிக்காது முற்று முழுதாக எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருந்தது.
 
உங்களுக்கு கதை சொல்லவேண்டிய அவசியம் இல்லை 3 இடியட்ஸ் ரீமேக்தான்.தமிழ் பதிப்பில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, அனுயா, சத்யன் , சத்தியராஜ்,எஸ்‌ஜெசூரியா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இயக்கம் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், தெய்வதிருமகள் விஜய் போல கதை, தான் என்று போடாமல் தனது இயக்கத்தின் மூலமாகவே எல்லோரையும் கட்டி போட்டுஇருக்கிறார். ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா அபாரமாக செய்திருக்கிறார் பாடல் காட்சிகள் ரசிக்க வைத்தன.

மேலும் முதலே கவர்ந்த பாடல்களான அஸ்கு லஸ்கா,ஜெல்லி பெல்லி பாடல்கள் காட்சி அமைப்பின் பின் மேலும் பிடித்து தொலைக்கின்றன. அதிலும் அஸ்கு லஸ்காவில் வரும் மாடர்ன் சாங்க்,ரோயல் சாங்க்,குத்து பாடல் என்று காண்பிப்பதன் மூலம் ஷங்கர் தனது பிம்பத்தை உடைத்துள்ளார்.அடுத்து ஜெல்லி பெல்லி இலியானாவின் இடுப்பாட்டம் ரொம்பவே கலக்கலாக உள்ளது. விஜய் பற்றி பாடல் காட்சிகளில் சொல்லவே தேவையில்லை அந்த மாதிரி கலக்கி உள்ளார். மேலும் சத்யன் நிகழ்த்தும் அந்த வரவேற்புரை சிரித்து சிரித்து முடியவில்லை.கலவி-கல்வி,கற்ப்பித்தல்-கற்பழித்தல் சரியாக பொருந்தி போகிறது. மேலும் காதல் வந்தால் எப்பிடி இருக்கும் என்று விஜய் இலியானாவிடம் சொல்லும்போது அதுக்கு இலியானா இதெல்லாம் ஷங்கர் படங்களில் மட்டும்தான் என்று கூறும்போது திரையரங்கில் என்ன வரவேற்பு.



விஜய் அபாரமாக நடித்துள்ளார் அதே போலவே ஸ்ரீகாந்த்,ஜீவா,அந்த மில்லிமீட்டர் பையன்,சத்தியராஜ்,இலியானா,அனுயா என அனைவரும் கலக்கியுள்ளனர். கேடி படத்தில் அறிமுகமாகிய இலியானாவுக்கும் இப்போதும் நிறைய வித்தியாசம், விஜய்க்கு மட்டுமல்ல நிறைய பேருக்கு இவ்வாண்டு கல்யாணகோலத்தில் வந்துபோவார். பெல்லி டான்ஸ் அருமையாக செய்துள்ளார். மொத்தத்தில் நண்பன் விஜய்,ஷங்கருக்கு மாபெரும் வெற்றி. ஷங்கரிடம் இருந்து எந்திரன் போன்ற படங்களை விட நண்பன் போன்ற படங்களையே எதிர்பாக்கிறேன்.இன்றுதான் தியேட்டரில் எனது வாழ்நாளில் முதல்முதலாக சிரிச்சு,ரசித்து ஆத்ம திருப்தியாக படம் பார்த்தேன்.


                                                                 



















                             


















                                                                                                                                                               

Monday, January 2, 2012

இலங்கை பாராளுமன்றில் பதிவர்கள்-2

 ஆணுக்கும், பெண்ணுக்கும் சமஉரிமை வழங்கபடவேணும் அனைத்து பெண்களும் முகம் தெரியுமாறு செல்லவேண்டும்,முக்காடு போடக்கூடாது என்று சீரியஸ் ஆக கதைத்து கொண்டிருக்க பின்வரிசையில் கும்மி அடித்து கொண்டிருந்த நான்,மைந்தன் சிவா,பொட்டலம் கார்த்தி ஆகியோர் ஆமாண்ட மச்சான் அப்பத்தானே எல்லா பொண்ணுகளையும் சைட் அடிக்கலாம் என்று கைதட்டி ஆரவாரம் செய்தோம்.அப்போ சீரியசா உரை நடந்து கொண்டிருந்தபோது நாங்கள் ஆரவாரம் செய்ததால் எல்லோரும் ஒரு முறாய்ப்போடு எங்களை பார்த்தார்கள்.நாங்கள் கப்-சிப் என அமைதியானோம்.சபாநாயகர் ஜனா எங்களை எச்சரிக்கை செய்தார்.எங்களுக்கு வந்ததே ஒரு கோபம், எனினும் அடக்கிகொண்டு நானும் மைந்தன் சிவாவும் பிளான் போட்டோம் இங்க இருக்கிற செங்கோலை ஒரு நாள் சுட்டுட்டு போய் எமது திறமையை நிரூபிக்கோனும் என்று.
                                         அடுத்து சபாநாயகர் மூத்த பதிவர்,முதியோர் நலன்,சுற்றுலா அமைச்சர் கானபிரபாவை உரையாற்ற அழைத்தார்.கானபிரபா அண்ணனும் தான் பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறோம் என்பதை மறந்து ட்விட்டரில் இருப்பதாய் எண்ணி காலை இனிதே விடிந்தது  என்று பேச்சை ஆரம்பித்தார் சபையினர் எல்லோரும் கல கலவென சிரித்தனர் அப்போ தொல்லியல்,கலாச்சார அமைச்சர் மெர்வின் போன்று சொசெசூ காரியங்களில் ஈடுபடும் இன்னோர் மூத்த பதவி பதிவர் வந்தியதேவனும் பாராளுமன்றத்தில் இருப்போம் என்பதை உணராது பெரியப்பூ இப்ப விடிஞ்சு நேரமாச்சு என்றார், ஏலவே பாராளுமன்றத்தில் மாறி பேசிவிட்டோம் என்று கடுப்பில் இருந்த கானபிரபா அண்ணனுக்கு வந்தியதேவன் பெரியப்பூ என்று கூறி தனது வயதை வெளிக்காட்டி விட்டார் என்று மேலும் கடுப்பில் இருந்தார்.இருந்தும் தன்னை சுதாகரித்து கொண்டு பேச்சை தொடர்ந்தார், நாட்டிலுள்ள முதியவர்கள் உடல்நலத்துடன்  வாழ நாடு முழுதும் ஜிம் பயிற்சி நிலையங்கள் அமைத்து காலையும் மாலையும் பயிற்சி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தான் இவ்வாறு ஜிம் செய்வதால் இப்போதும் இளமையாக இருப்பதாக கூறி முதியவர் என சபைக்கு தெரியவந்தாலும் இள ரத்தமாக காட்ட இப்படி பீலா விட்டார். மேலும் சுற்றுலா அமைச்சும் தன்னுடையது என்பதால் அது தொடர்பாக தொடர்ந்து பேசினார் தான் இப்படி இளமை துள்ளலாக இருப்பதால்தான் பாங்கொங்க் அங்கு இங்கு என்று பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் தன்னை கேரள கன்னியர்கள் பார்ப்பதாக கூறினார்.
                                                                                                                                                            இப்படியாக கானபிரபா அண்ணே உரையாற்றி முடிந்ததும் அடுத்து சபாநாயகர் போக்குவரத்து, பல்கலைதுறை அமைச்சர் அனுதினன் அவர்களை உரையாற்ற அழைத்தார்.வணக்கம் நண்பர்ஸ் என அனுதினன் தான் ட்விட்டரில் வந்து போறமாதிரி பேச்சை ஆரம்பித்தார், அப்போ இடைமறித்த எதிர்கட்சி உறுப்பினர்கள் இம்முறை பல்கலைதெரிவில் அநீதி இழைக்கப்ப்ட்டுளது இதுக்கு நீங்க என்ன பதில் அளிக்க போகின்றீர்கள் என சீரியஸ் ஆக கேள்வி கேட்டார் ஆனால் அனுதினனோ யார் வந்தால் நமக்கென்ன வரும் பிகர்களை சைட் அடிக்கோனும் நமக்கென்ன முடியுமோ அதைதானே பண்ணனும் நான் இந்த வருசத்தையே வெடிக்கு பயந்து ஒதுங்கும் பெண்களை சைட் அடிச்சே ஆரம்பிச்சேன் அப்ப இந்த வருஷம் கொண்டாட்டம்தான் என்று கூறினார், இதை கேட்ட சபாநாயகர் ஜனா என்னது பல்கலை அமைச்சராக இருந்து கொண்டு இப்படி பேசுகிறீர் என்று கேட்டார் அதுக்கு அனுதினன் 
என் சில நண்பர்கள் அநியாயத்துக்கு நல்லவர்களாகஇருப்பதால், என்னையும் அப்படியே பாக்கிறார்கள். #நான்_பொறுப்பல்ல என்று தனது பாணியில் பதில் அளித்தார். சரி இதை விடும் உமது அடுத்த அமைச்சு போக்குவரத்து துறை பற்றி பேசுவோம் என்று கூறினார். தனதுரையை தொடர்ந்த அனுதினன் ஆமாம் நான் இந்த அமைச்சை மிகவும் கவனமாக கையாளுகிறேன் நான் பஸ்ஸில்  எல்லா இடமும் செல்லும்போதும் சந்திக்கு சந்தி அப்டேட் கொடுத்து கொண்டிருக்கிறேன் அப்ப பதிவர் வந்தியதேவன் அப்ப என்ன நீர் பஸ் மாமாவா என கேட்க சபையே சிரிப்பொலியால் அதிர்ந்தது.

தொடரும்.......

Saturday, December 31, 2011

இலங்கை பாராளுமன்றில் பதிவர்கள்-1

முற்குறிப்பு-இப்பதிவு முற்றுமுழுதாக நகைச்சுவை உணர்வோடே   எழுதப்படுகிறது. இதில் வரும் பதிவர்கள் மனம் ஏதும் நோகும்படி இருந்தால்,கூறினால் நீக்கப்படும்.

நாட்டிலே இருக்கும் அரசியல் கட்சிகளால் ஏதும் பயனில்லை என்று உணர்ந்த மக்கள் அடுத்த நடைபெற்ற தேர்தலில், பதிவுலகில் நடைபெறும் அரசியல்களை எல்லாம் பார்த்த மக்கள் இதை விட மிகச்சிறப்பாக அரசியல் நடத்தகூடியவர்கள் வேறு ஒருத்தரும் இல்லை என்பதை உணர்ந்து பதிவர்களையே பாராளுமன்றிற்கு தெரிவு செய்கிறார்கள்.


                                                                                       பதிவர்கள் எல்லோரும் பாராளுமன்றில் வீற்றிருக்கின்றனர். அப்போது சபாநாயகர் பதிவர் ஜனா பாராளுமன்றில் வருகை தருகிறார் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று மரியாதை கொடுக்கின்றனர் அப்போது பதிவர்,மகளிர் விவகாரதுறை அமைச்சர் மருதமூரான் மட்டும் சபாநாயகர் வருவதையே உணராது தொலைபேசியில் பேஸ்புக் அரட்டையில் தேவதைகளுடன் ஒரு பக்கம் மிதந்து கொண்டு மறுபுறம் காதல்ரசம் சொட்டும் ஸ்டேட்டஸ்களை அள்ளி வீசிக்கொண்டு இருக்கிறார்.திடீர் என்று சபாநாயகர் வருவதை உணரந்து எழுந்து நிக்கிறார்.சபாநாயகர் சென்று தனது ஆசனத்தில் அமர்ந்ததும் அவை தொடங்குகிறது. பதிவுலகில ஆணாத்திக்கம் என்று பல பேர் அடிக்கடி குறைபட்டு கொள்வதால் சபாநாயகர் முதலில் மகளிர் விவகார துறை அமைச்சர் மருதமூரானை உரையாற்ற அழைக்கிறார். மருதமூரான்  "விலகியோடும் குழந்தையை சுற்றியிருக்கும் தாயின் அக்கறை மாதிரி, 'காதல்' மீதான அக்கறையும் அது இழக்கப்படும் சந்தர்ப்பங்களில் தான் அதிகரிக்கிறது!! " என்று தான் பாராளுமன்றில் நிக்கிறோம் என்பதை உணராது பேஸ்புக் ஸ்டேட்டஸ் போடும் நினைப்பில் உரையாற்றுகிறார். மற்ற உறுப்பினர்களும் ரசித்து கொண்டிருக்க பதிவர் சினிமாதுறை அமைச்சர் ஜீ எழுந்து யோவ்வ் இங்க என்ன நடக்குது என்று பெண்கள் மேல் உள்ள வெறுப்பால் கத்த அப்போதுதான்   அரசாங்க பிரதம கொறடா அதிகார மையம் நிருஜா எழுந்து என்ன மருதமூரான் சம்பந்தம் இல்லாமல் கதைக்கிறீர் அமரும் என்கிறார்.

                                                                                                                                             அதை தொடர்ந்து சபாநாயகர், தன்னை (எதிர்க்கட்சி தலைவர் ) பேச அழைப்பார் என்று எதிர்பார்த்த நிரூபனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது சபாநாயகர் எதிர்க்கட்சி பிரதம கொறடா,சமய விவகார அமைச்சர் பதிவர் ஐடியாமணி அவர்களை அழைத்தார். ஐடியாமணியும் எழுந்து மனிதஉரிமைகள் காக்க படவேணும் கல்லால் எறிந்து கொள்ளவது தடைசெய்ய படவேணும், ஆணுக்கும், பெண்ணுக்கும் சமஉரிமை வழங்கபடவேணும் அனைத்து பெண்களும் முகம் தெரியுமாறு செல்லவேண்டும்,முக்காடு போடக்கூடாது என்று சீரியஸ் ஆக கதைத்து கொண்டிருக்க பின்வரிசையில் கும்மி அடித்து கொண்டிருந்த நான்,மைந்தன் சிவா,பொட்டலம் கார்த்தி ஆகியோர் ஆமாண்ட மச்சான் அப்பத்தானே எல்லா பொண்ணுகளையும் சைட் அடிக்கலாம் என்று கைதட்டி ஆரவாரம் செய்தோம்.அப்போ சீரியசா உரை நடந்து கொண்டிருந்தபோது நாங்கள் ஆரவாரம் செய்ததால் எல்லோரும் ஒரு முறாய்ப்போடு எங்களை பார்த்தார்கள்.


தொடரும்......


நேரம் இன்மையால் பதிவு குறுகிவிட்டது மன்னிக்கவும்.

Tuesday, November 22, 2011

பிரகாசிக்கும் இளம் நட்சத்திரங்கள்

இந்த பருவ காலத்தில் நடந்த கிரிக்கெட் போட்டிகளில் அறிமுக இளம் வீரர்கள் சிறப்பாக செயற்பட்டு வருகின்றனர். முக்கியமாக டெஸ்ட் போட்டிகளில் எனவேதான் இப்போதும் டெஸ்ட் போட்டிகள் விறுவிறுப்பாக இருக்கின்றன. எந்த இளம் வீரர்கள் சாதித்ருக்கிறார்கள் என்று இங்கு பார்ப்போம்.

1.பற் கம்மின்ஸ்
18 வயதேயான கட்டிளம் காளையான இவர் இந்த தென்னாபிரிக்காவுக்கான தொடரிலேயே T20,ஒருநாள்,டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்டார். முதலிரண்டு T20 போட்டிகளிலேயே தனது அதிவேகத்தால் தென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்களை தடுமாற வைத்து 5 விக்கெட் கைப்பற்றியிருந்தார். தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளிலும் அறிமுகத்தை மேற்கொண்டு 5 விக்கெட் கைப்பற்றியிருந்தார். எனவே முதலாவது டெஸ்ட் போட்டியில் அணியை தேர்வு செய்வதில் தேர்வாளர்களுக்கு மிக நெருக்கடியை ஏற்படுத்தி இருந்தார். இறுதி நேரத்தில் அணியில் இடம் பெறாமல் போனார் இவர் உடல்நிலை டெஸ்ட் போட்டிகளுக்கு ஒத்துளைக்குமா என்றும் கேள்வி எழுப்பட்டது.இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயமடைந்த ஹாரிஸுக்கு பதிலாக இடம் பெற்றார். முதல் இன்னிங்சிலேயே சிறப்பாக பந்து வீசினார் இவரது லைன்&லெந்த் சிறப்பாக இருந்தது ஆனாலும் ஒரு விக்கெட்டே  கைப்பற்றினார். இரண்டாவது இன்னிங்சில் மிகச்சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்களை சாய்த்த்தது மட்டுமில்லாமல் இறுதி நேரத்தில் துடுப்பாட்டத்திலும் கை கொடுத்து ஆஸி அணியின் வெற்றிக்கு துணை புரிந்து ஆட்டநாயகன் விருது பெற்றார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் உயரமாக இருப்பதால் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் பெறுவதும் இலகு, தொடர்ச்சியா140Km/h என்றவேகத்தில் பந்து வீசுவது கூடுதல் பலம். மிக இளம் வயதை கொண்டிருப்பதால் நிறைய சாதிப்பதுக்கு வாய்ப்பு உண்டு எதிர்கால ஆஸி அணியின் பந்துவீச்சு தலமைஆயுதமாக வர்ணிக்க படுகிறார்.



2.வெரோன் பிளண்டர்
இவர் 2007 கால பகுதியில் தென்னாபிரிக்க அணிக்காக T20,ஒருநாள் போட்டிகளில் சகலதுறை ஆட்டக்காரராக அறிமுகத்தை மேற்கொண்டு இருந்தாலும் அந்நேரம் அவ்வளவாக சாதிக்கவில்லை.இருந்தும் தொடர்ச்சியாக உள்ளூர் போட்டிகளில் சாதித்து வந்ததால் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இடம்பிடித்தார். ஆஸிக்கு எதிரான முதல் போட்டியில் டொஸ்டோபேயை பின்னுக்கு தள்ளி விட்டு அணியில் வாய்ப்பு பெற்றார். ஆரம்பத்தில் இவரது உள்ளடக்கம் சிறிது குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.ஆனாலும் இவரது சொந்த மைதானம் என்பதால் இவருக்கு சாதகமாக இருந்தது. முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் கைப்பற்றிய இவர் இரண்டாவது இன்னிங்சில் ஆஸி அணியை உருட்டி எடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். ஸ்டேய்ன் போன்று வேகமாக இல்லாவிட்டாலும் நேர்த்தியாக பந்து வீசியதால் விக்கெட் வேட்டை நடாத்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். இரண்டாவது போட்டியிலும்முறையே 1,5 விக்கெட் கைப்பற்றினார். இப்போது தென்னாபிரிக்காவுக்கு மூன்றாவது வேகப்பந்து வீச்சாளரும் கிடைத்து விட்டார் இப்போது அச்சுறுத்தும் வேகப்பந்து கூட்டணியை கொண்டு உள்ளது.


3.ஜூனைட் கான்
21 வயதேயான இடது கை வேகப்பந்துவீச்சாளரான இவர் தனது டெஸ்ட் அறிமுகத்தை ஜிம்பாப்வே அணிக்கெதிராக மேற்கொண்டிருந்தார் . ஆனால் அந்த போட்டியில் சாதிப்பதுக்கு போதியளவு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அடுத்து நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மத்திய கிழக்கு தட்டை ஆடுகளங்கிலேயே 12 விக்கெட்களை கைப்பற்றினார். இவரது லைன்& லெந்த் சிறப்பாக உள்ளது மேலும் இவரும் தொடர்ச்சியாக வேகமாக பந்து வீசுகிறார். பாகிஸ்தான் மட்டும் எப்படியோ வேகப்பந்து வீச்சாளர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள் அக்ரம்,ஆமிர்,தன்வீர் வரிசையில் இப்போ இவர். இவரும் மிக இளம் வயதேயே கொண்டிருப்பதால் சாதிக்க நிறைய உண்டு.

.

4.கேர்க் எட்வர்ட்ஸ்
27 வயதான இவர் மேற்கிந்திய அணிக்காக விளையாடுகிறார். அறிமுக போட்டியிலேயே இந்திய அணிக்கெதிராக சதமடித்தவர். இப்போது ஆறு போட்டிகளில் 2சதம் 3 அரைச்சதம் உட்பட 61.88 என்ற மிகச்சிறந்த சராசரியில் 557 ஓட்டங்களை குவித்துள்ளார். மீள கட்டி எழுப்பபட்டு கொண்டிருக்கும் மேற்கிந்திய  அணிக்கு முட்டு கொடுக்கும் ஒரு தூணாக இருந்து வருகிறார்.




5.ரவிசந்திரன் அஷ்வின்
25 வயதான இவர் ஒருநாள்,T20 போட்டிகளில் போன வருடம் அறிமுகமாகி முறையே 35,4 விக்கெட்களை வீழ்த்தி தொடர்ச்சியாக சிறப்பான பெறுபேறுகளை வழங்கி டெஸ்ட் அணியின் கதவுகளை தட்டிய வண்ணமே இருந்தார். இப்போதுதான் ஹர்பஜனின் மோசமான போர்ம் காரணமாக அணியில் இடம் கிடைத்தது.கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்ட அஷ்வின் முதல் போட்டியிலேயே 3,6 விக்கெட்களை முறையே ஒவ்வொரு இன்னிங்சில் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்து ஆட்டநாயகன் விருது பெற்றார். இப்போது நடந்து கொண்டிருக்கும் தொடரில் 15 விக்கெட்களை இதுவரை கைப்பற்றி ஆஸி தொடருக்கு செல்லும் அணியில் தனது இடத்தை உறுதிபடுத்தி இருக்கிறார். ஆனால் இவருக்கு அங்குதான் சவால் காத்திருக்கிறது, இந்திய ஆடுகளங்கள் வழமையாகவே சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைப்பவை ஆஸியில்தான் இவரின் மீதி திறமைகள் தெரியும்.



















மேலே குறிப்பிட்டவர்களை தவிர இந்த பருவ காலத்தில் ஆஸி அணிக்காக மிட்செல் மார்ஷ்,இந்திய அணிக்காக வருண் ஆரோன் ஆகியோர் அறிமுகம் புரிந்துள்ளனர். மிட்சல் மார்ஷ் ஆஸி அணியில் எதிர்காலத்தில் சைமோண்ட்ஸ் இடத்தை நிரப்புவார் என எதிர்பாக்கிறேன். வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் கடந்த வாரம் கூட உள்ளூர் போட்டியொன்றில் மிகச்சிறப்பாக பந்து வீசியிருந்தார்.மேலும் இறுதி நேரங்களில் அடித்தாடக்கூடிய துடுப்பாட்ட வீரரும் கூட. அடுத்தவர் ஆரோன் இந்தியாவிலேயே மிக வேகமாக பந்து வீசுபவர் என்ற ரீதிலேயே வந்துள்ளார் அணிக்குள், இவரது உள்ளூர் போட்டிகளின் பெறுபேறுகள் கூறிக்கொள்ளும்படியாக இல்லை. இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் அறிமுமாகி இன்று நடைபெறும் மேற்க்கிந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமாகி இருக்கிறார். இன்றைய போட்டியில் இவர் அதிகளவான ஷாட் பிட்ச் பந்துகளையே வீசுகிறார், அருமையாகவே நேர்த்தியான பந்துகளை வீசுகிறார் கவாஸ்கார் கூறியது போன்று முதல் நாள் பதட்டமாக இருக்கலாம், மும்பை ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் இல்லை. இவரையும் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

Thursday, October 27, 2011

ரா-ஒன்

வேலாயுதம்,ஏழாம்அறிவு இரண்டு படமும் பார்தாச்சு இன்று ரா-ஒன் பார்ப்பம் என்று மஜெஸ்டிக் சிட்டி திரையரங்குக்கு சென்று இருந்தேன் இதுதான் நான் முதன் முதலாக திரையரங்கில் பார்க்கும் ஹிந்தி படம்.என்றாலும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமலே சென்று இருந்தேன். ஏனெனில் கிட்டடியில் கிடைத்த அனுபவம்.
  
                        படத்தின் கதை இதுதான் ஷாருக்கான் ஒரு கணனிவிளையாட்டுக்கள் உருவாக்கும் நிறுவனத்தில் லண்டனில் வேலை செய்கிறார்.ஷாருக்கான்,கரீனா கபூர் திருமணமாகி ஒரு மகனும் இருக்கிறான்.அவன் பாடசாலையில் கல்வி கற்கிறான்.இந்த நேரத்தில் ஷாருக்கான் வேலை செய்யும் நிறுவனத்தில் ஒரு புதிய கணனி விளையாட்டை உருவாக்கும் செயற்றிட்டம் வருகின்றது ஷாருக்கான் தலைமையில் கணனி விளையாட்டு உருவாக்கிறார்கள்.அதில் உருவாகும் வில்லன் நிஜத்திலேயே உலகத்துக்கு வந்து விளையாட்டை உருவாக்கிய ஷாருக்கானை கொன்று விடுகிறான்.அந்த வில்லன்தான் ரா-ஒன் இதை தடுக்க ஜி‌-ஒன் வந்து எப்புடி அழிக்கிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்லி உள்ளார்கள்.எப்படி ரா-ஒன்னை அழித்து யாரை காப்பாற்றுகிறார் என்பதை திரையில் கண்டு கொள்ளுங்கள்.



                                                                        ஷாருக்கான் கொடுத்த விளம்பரங்கள் வீண் போகவில்லை நிச்சயமாக படம் வசூலில் முன்னுக்கு வரும்.ஷாருக்கான் நகைச்சுவையில் கலக்கி இருக்கிறார்.அவரின் மகனான நடிக்கும் சுட்டி பையனும் நன்றாக நடித்து உள்ளான். ஆனால் இந்த சுட்டி பையனுக்கு இவ்வளவு திறமை இருக்குமா என்றது லாஜிக் மீறல். கரீனா கபூருக்கு இப்போ ஒரே ஏறுமுகமாக இருக்கிறது அனைத்து காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். பாடல்கள் ஏலவே வந்து ஹிட் ஆகினாலும் திரைஅமைப்போடு சேர்ந்து மேலும் ஹிட் ஆகும். ஏகோன் பாடிய இரண்டு பாடலிலும் கரீனா,ஷாருக்கின் நடனஅசைவுகள் சூப்பர்.சண்டைக்காட்சிகள்
அட்டாகாசமாக படமாக்கியுள்ளார்கள். ரயில் காட்சி,லண்டன் வீதியில் படமாக்கிய காட்சி என்னை மிகவும் கவர்ந்து உள்ளது.அட மறந்திட்டன் ரஜினியும் ஒரு காட்சியில் வந்து போகிறார ஆனால் ஊடகங்கள் எழுதியது போன்று ஷாருக்கை காப்பாற்றும் சூப்பர் ஹீரோவாக இல்ல. சில ரஜினி அடிபொடிகள் சொல்லுவது போல ரஜினிக்காண்டிதான் படம் ஓடும் என்பது வீண் பேச்சு.ஆனால் ரஜினிக்கு உரிய மரியாதை கொடுத்திருக்கிற்றார் ஷாருக்.

                     இந்த பதிவு யாழ்ப்பாணம் செல்லும் பஸ்ஸில் இருந்து எழுதிகொண்டு இருக்கிறேன் படம் இன்று பின்னேரம் பார்த்த்வுடன் விம்ர்சனம் எழுத  வேண்டும் என்ற அவாதான் உடனே பதிவு இட தூண்டியது. இப்ப பஸ்ஸில் ஏழாம் அறிவு போடுகிறார்கள். மொத்தத்தில் தீபாவளிக்கு வந்த ஏழாம் அறிவு திரைக்கதையின் வேகமின்மையாலும்,வேலாயுதம் இரண்டாம் பகுதி மறுபடியும் வழமையான விஜய் படத்தை நினைவு படுத்தியதாலும் ரா-ஒன் இரண்டையும் முற்றுமுழுதாக விழுங்கி விட்டது நான் ஹிந்தியில் ஆங்கில உபதலைப்புகளுடன் பார்த்தேன்.


Tuesday, October 25, 2011

ஏழாம் அறிவு

இன்று முதல் நாள் முதல் ஷோ பார்க்க பாமங்கடை ஈரோசில் பின்னேரம் சென்று இருந்தேன். சூரியா,முருகதாஸ் படம் ஸ்ருதி தமிழில் அறிமுகம் பிரமாண்ட விளம்பரம் என ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நேரத்துக்கே சென்றிருந்தோம். ஆனால் எதிரிபார்த்த ரசிகர்கள் வரவில்லை. படம் 3.10 மணிக்குத்தான் போட்டார்கள். 



                                                               ஆரம்பத்தில் 1600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பல்லவ மன்னனின் 3வது மகனான போதிதர்மா அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்று விளங்குகிறார் மருத்துவம்,தற்காப்பு கலைகளிலும் கலக்குகிறார். பின் தனது குருமாதா அறிவுரை கேட்டு சீனாவுக்கு பயணமாகிறார் அங்கு ஒரு கிராமத்தில் வைரஸ் நோய் பரவுகிறது போதிதர்மா தான் கற்ற மருத்துவ கலையின் மூலம் குணப்படுத்த முடியாத நோயை குணப்படுத்துகிறார். பின் அக்கிராமத்துக்கு வரும் தீயவர்களை தான் கற்ற கலைகள் மூலம் பந்தாடுகிறார். உடனே அக்கிராமத்து மக்கள் கேட்டு கொண்டதுக்கு இணங்க கலைகளை போதிக்கிறார். அவர் போதித்த கலையான ஷாலோய்ன் இன்றும் சீனாவின் முக்கிய ஒரு தற்பாதுகாப்பு கலையாகும் இன்றும் சீனாவில் கோவில் கட்டி வழிபடுகிறார்களாம் இத்தனைக்கும் போதிதர்மா ஒரு தமிழர். பின் போதிதர்மா சொந்த நாட்டுக்கு பயணிக்கும்போது சீனாவில் போதிதர்மா புதைக்கபட்டால் ஒரு நோயும் வராது என்பதற்காக போதிதர்மா நஞ்சுணவு உட்கொண்டு இறந்து போகின்றார். இந்த வரலாறு போதிதர்மா பற்றி சீன,தாய்லாந்து மக்களுக்கு தெரிந்திருக்கிறது தமிழர்களுக்கு தெரியவில்லை இந்த விடயத்தை வெளிக்கொணர்ந்ததுக்கு முருகதாசை பாராட்டியே ஆக வேண்டும்.



                                                                                                                                                 இனி கதை நிகழ் காலத்துக்கு வருகிறது. ஸ்ருதி ஒரு விஞ்ஞானி நரம்பியல் அணுக்கள் பற்றி ஆராய்கிறார் மூன்று வருடங்களாக அவர் ஆராய்ந்து முடிவில் ஒரு மனிதனுடைய நரம்பியல் அணுவில் அதன் பரம்பரை எச்சங்களை தூண்டிவிடுவதன் மூலம் அதே திறமைகளை கொண்டுவரமுடியும் என்று கண்டுபிடிக்கிறார்.போதிதர்மாவின் பரம்பையினரை கண்டு பிடித்து அவர்களின் பரம்பரை அலகுகளை தூண்டி விடுவதன் மூலம் போதிதர்மாவின் திறமைகளை கண்டுபிடித்து அதன் மூலம் மருத்துவ துறையில் முன்னேற்றம் கொண்டு வரலாம் என்று புறப்படுகிறார். இது பற்றி போதிதர்மா முன்பு எழுதிய நூலிருந்தே தெரிந்து கொள்கிறார்.அந்த போதிதர்மாவின் வாரிசு வேறுயாருமல்ல சர்கஸ் கலைஞர் சூரியாதான் அவரை பின்தொடர்ந்து அவரை உறுதிபடுத்தி கொள்கிறார். இதற்கிடையில் சூரியா ஸ்ருதி மீது காதல் கொள்கிறார் ஒருகட்டத்தில் ஸ்ருதி பற்றி உண்மை தெரியவர சூரியா மனமுடைந்து போகின்றார்.


                                                                                                       இதே நேரம் சீனாவில் இருந்து ஆபரேஷன் ரெட்டுக்கு இந்நாள் போதிதர்மா ஆச்சிரமத்தின் முதன்மை சீடன் தேர்ந்தெடுக்கபட்டு இந்தியா வருகிறான். அவன் இந்தியாவில் வந்து என்ன செய்தான்? சூரியா ஸ்ருதி இறுதியில் சேர்ந்தார்களா? சூரியா,ஸ்ருதி நாட்டுக்கு வந்த ஆபத்தை எப்படி காபாற்றினார்கள் என்பதை திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

                                                                     படத்தில் சூரியா,ஸ்ருதி அருமையாக நடிப்பை வெளிக்காட்டியிருந்தாகள் மேலும் டொன்லீயாக நடித்த நடிகர் பற்றி சொல்லவே நடை,பார்வை தொடக்கம் அனைத்திலும் கூர்மையாகவே இருந்தார். பாடல்கள் ஆரம்ப சீன மொழி பாடலின் பின்னணி இசை என்னை கவர்திருந்தது. அடுத்த பாடல் முன்னந்தி சாரல் நீ ஏலவே கேட்ட இசையாக இருந்தாலும் மனதுக்கினியதாக இருக்கிறது முத்துக்குமாரின் கவித்துவ வரிகளோடு சேர்ந்து மேலும் இப்பாடலில் ஸ்ருதி நீருக்கடியில் வரும் சிறு நடனஅசைவுகள் என்னை கவர்திருந்தது,யம்மா யம்மா பாடலில் இறுதியில் சூரியா செய்யும் நடன அசைவுகளும் ஆர்ப்பாடமில்லாமால் நன்றாக இருக்கிறது. இன்னும் என்ன தோழா ஓட்டவில்லை ஏலே ஏலமா எனக்கு பிடித்திருந்தது என்ன ஸ்ருதி இடையில் தமிழ் கொலை செய்கிறார். மொத்தத்தில் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை இதுக்கு முக்கிய காரணம் தல ஸ்டைலில் உதயநிதி ஸ்டாலினுக்கு சொன்னால் ஓவர் விளம்பரம் படத்துக்கு ஆகாது. சராசரி படம், பார்க்கலாம்.